உள்ளூர் செய்திகள்

அரசு பஸ் சேவையை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அரசு பஸ் சேவை மீண்டும் தொடக்கம்- எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

Published On 2022-09-05 09:55 GMT   |   Update On 2022-09-05 09:55 GMT
  • மாணவ- மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் அவதியடைந்து வந்தனர்.
  • முதல்- அமைச்சர் தங்கள் தொகுதியில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சனைகளை பட்டியலிட அறிவுறுத்தியுள்ளார்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியிலிருந்து காத்திருப்பு கண்டமங்கலம், கொண்டத்தூர், பாகசாலை, கதிராமங்கலம், வைத்தீஸ்வரன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வழியாக மயிலாடுதுறைக்கு அரசு பஸ் இயங்கி வந்தது.

இந்த அரசு பஸ் சேவை 10 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டது.

இதனால் 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கும், கிராம மக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கும் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் அவதி அடைந்து வந்தனர்.

இது குறித்து சீர்காழி எம்.எல்.ஏ பன்னீர்செல்வத்திடம் கிராம மக்கள் சார்பில் காத்திருப்பு ஊராட்சி மன்ற தலைவர் அன்புமணிமணிமாறன் கோரிக்கை விடுத்தார்.

இதனை அடுத்து நிறுத்தப்பட்ட அரசு பஸ் சேவை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிறுத்தப்பட்ட பஸ் சேவை தொடக்க விழா காத்திருப்பு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் அன்புமணிமணிமாறன் தலைமையில் நடைபெற்றது.

இதில் காத்திருப்பு ஊராட்சி மன்ற தலைவர் அன்புமணி மணிமாறன் மற்றும் அரசு போக்குவரத்துக் கழக மண்டல மேலாளர் மகேந்திர குமார், மயிலாடுதுறை கிளை மேலாளர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தனர்.

பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பஸ் சேவை கொடியசைத்து தொடங்கி வைத்து பேசுகையில், தமிழக முதல் அமைச்சர் தொகுதியில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சனைகளை பட்டியலிட அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி சீர்காழி சட்டமன்றத் தொகுதியிலும் நீண்ட ஆண்டு பிரச்சனைகள் பட்டியலிடப்பட்டு வருகிறது. மக்களின் தேவைகளை அறிந்து முதல் அமைச்சர் சிறப்பாக சேவையாற்றி வருகிறார் என்றார்.

பின்னர் அதே பஸ்சில் காத்திருப்பில் இருந்து சீர்காழி வரை 4 கிலோமீட்டர் தூரம் மக்களோடு எம்.எல்.ஏ பயணம் செய்தார்.

இதில் தொ.மு.ச மத்திய சங்க பொறுப்பாளர்கள் இளங்கோவன், வெங்கடேசன், பத்மநாபன் மற்றும் திமுக நிர்வாகி மணிமாறன் பங்கேற்றனர்.

Tags:    

Similar News