பெரியபாளையம் அருகே விவசாயி வீட்டில் நகை-பணம் கொள்ளை
- ரமேஷ் விவசாய நிலத்தை பார்த்துக்கொள்ள மஞ்சஞ்காரணை கிராமத்தில் வந்து தங்கி இருந்து விட்டு செல்வது வழக்கம்.
- பீரோவை 2 மர்ம நபர்கள் உடைத்து அதில் இருந்த நகை-பணத்தை அள்ளினர்.
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள மஞ்சஞ்காரணை கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். விவசாயி.
இவரது மகள் சென்னையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். ரமேசுக்கு சென்னையிலும் வீடு உள்ளது. விவசாய நிலத்தை பார்த்துக்கொள்ள மஞ்சஞ்காரணை கிராமத்தில் வந்து தங்கி இருந்து விட்டு செல்வது வழக்கம்.
நேற்று இரவு வீட்டின் மாடியில் ரமேஷ் தூங்கினார். இந்த நிலையில் வீட்டின் உள்ளே இருந்து சத்தம் வருவதை கேட்டு சந்தேகம் அடைந்த அவர் கீழே இறங்கி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோவை 2 மர்ம நபர்கள் உடைத்து அதில் இருந்த நகை-பணத்தை அள்ளினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ் கூச்சலிட்டதும் கொள்ளையர்கள் 2 பேரும் வீட்டில் இருந்து நகை-பணத்துடன் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெரியபாளையம் அருகே குமரப்பேட்டை கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் நடைபெற்றது. தற்போது மீண்டும் கொள்ளை சம்பவம் நடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.