குளுந்தாளம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
குளுந்தாளம்மன் கோவில் தேரோட்டம்
- முக்கியஸ்தர்கள் தலைமையில் ஆண்களும், பெண்களும் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
- பின்னிரவில் அம்பாள் வீதியுலாவில் அக்னி கப்பரை எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதார ண்யம் அடுத்த தேத்தாகுடி குளுந்தாளம்மன் முனீஸ்வரர் கோவிலில் 65-வது ஆண்டு தேர் திருவிழா நடந்தது. கிராம முக்கியஸ்தர்கள் தலைமையில் ஆண்களும், பெண்களும் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
முன்னதாக, காலை சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் திருவிழா தொடங்கி அன்று பகல் முழுவதும் பல்வேறு இறை வழிபாடுகளுக்கு பின் குளுந்தாளம்மன் தேர் திருவிழாவும் விடிய விடிய பலகலை நிகழ்ச்சிகளும் நடந்தது.
தொடர்ந்து, பின்னிரவில் அம்பாள் வீதியுலாவில் அக்னி கப்பரை எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை மறலாளிகள், நிர்வாக குழுவினர்கள் உள்பட தேத்தாகுடி கிராமமக்கள் செய்திருந்தனர்.
விழாவில், கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சியும், அன்னதானமும் நடந்தது.