திருக்கோவிலூர் அருகே இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை:ஆர்.டி.ஓ. விசாரணை
- சஞ்சனாதேவி (3) என்ற மகளும் கிஷோர் (2) என்கிற மகனும் உள்ளனர்.
- இந்த வழக்கை வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைத்தனர்.
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் அருகே உள்ள ஜி.அரியூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை மனைவி தீபா (வயது 22). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகின்றது. சஞ்சனாதேவி (3) என்ற மகளும் கிஷோர் (2) என்கிற மகனும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு தீபா தூக்கு போட்டு கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார். அப்போது தீபாவின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தூக்கில் தொங்கிய தீபாவை காப்பாற்றி 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்து பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருந்தும் சிகிச்சை பலனின்றி தீபா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருவதுடன் தீபாவுக்கு திருமணம் ஆகி 5 வருடங்கள் மட்டுமே ஆவதால் தற்கொலைக்கு காரணம் வரதட்சணை கொடுமையாக இருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் இந்த வழக்கை வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியரின் விசாரணை நடைபெற்று வருகிறது.