உள்ளூர் செய்திகள்

காரிமங்கலத்தில் அறநிலையத்துறை சேலம் இணை ஆணையர் மங்கையர்க்கரசி மற்றும் அதிகாரிகள் அருணேஸ்வரர் கோவிலில் நடந்து வரும் திருப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

காரிமங்கலம் மலைக்கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

Published On 2023-04-12 10:14 GMT   |   Update On 2023-04-12 10:14 GMT
  • அமைச்சர் சேகர்பாபு சம்பந்தப்பட்ட நிதியை மீண்டும் ஒதுக்குவதுடன் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்
  • திருப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ள சுமார் 30 லட்சம் மதிப்பீட்டில் திட்ட அறிக்கை அளிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன் திருப்பணிகள் சில மாதத்திற்குள் முடிக்கப்படும்

காரிமங்கலம்,

தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் மலை குன்றின் மீது ஸ்ரீ அபித குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

பழமை வாய்ந்த இக்கோவிலை புனரமை க்கவும் திருப்பணி மேற்கொள்ளவும் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சுமார் 82 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஒதுக்கப்பட்ட நிதியில் சுமார் 8 லட்சம் ரூபாயை அரசுக்கு அதிகாரிகள் திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.

மேலும் கடந்த பல மாதங்களாக திருப்பணி களும் மேற்கொள்ள ப்படவில்லை. இது குறித்து கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ. சட்டசபையில் கேள்வி எழுப்பியுடன் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு சம்பந்தப்பட்ட நிதியை மீண்டும் ஒதுக்குவதுடன் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதை தொடர்ந்து நேற்று அறநிலையத்துறை சேலம் இணை ஆணையர் மங்கையர்க்கரசி மற்றும் அதிகாரிகள் அருணேஸ்வரர் கோவிலில் நடந்து வரும் திருப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

திருப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ள சுமார் 30 லட்சம் மதிப்பீட்டில் திட்ட அறிக்கை அளிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன் திருப்பணிகள் சில மாதத்திற்குள் முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆய்வின்போது உதவி ஆணையர் உதயகுமார், செயல் அலுவலர் சிவக்குமார், அர்ச்சகர் புருஷோத்தமன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News