உள்ளூர் செய்திகள்

நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுற்றுச்சூழல் மாசை தவிர்க்க குப்பைகளை உரமாக்கும் நிலையங்களில் வழங்க வேண்டும்- சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் அறிக்கை

Published On 2023-01-10 14:23 IST   |   Update On 2023-01-10 14:23:00 IST
  • பொதுமக்கள் மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகளை தெருக்களில் கொட்டாமல் பசுமை மறுசுழற்சி மையங்களில் ஒப்படைக்கலாம்.
  • குப்பைகளை எக்காரணம் கொண்டும் நகராட்சி பகுதியில் எரிக்க கூடாது என நகராட்சி சேர்மன் தெரிவித்துள்ளார்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சங்கரன்கோவில் நகராட்சியில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தேவையற்ற குப்பைகள் மற்றும் பொருட்களை எரிக்ககூடாது எனவும், நகராட்சி பகுதியில் பொங்கல் பண்டிகையை சுற்றுச்சூழல் மற்றும் மாசு பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் புகையில்லா பொங்கலாக கொண்டாட பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மேலும் பொதுமக்கள் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தங்கள் வீடுகளில் சுத்தம் செய்து அகற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகளை தெருக்களில் கொட்டாமல் அவற்றை வாரச்சந்தை ரோடு, திருவேங்கடம் சாலை உரக்கிடங்கு மற்றும் பி.எஸ். நகர் பகுதிகளில் உள்ள நகராட்சி எம்.சி.சி. பசுமை மறுசுழற்சி மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 2 மணி வரை ஒப்படைக்கலாம்.

மேலும் டயர், துணி மற்றும் பழைய குப்பைகளை எரிப்பது தடை செய்யப்பட்டுள்ளதால் எக்காரணம் கொண்டும் நகராட்சி பகுதியில் குப்பைகளை எரிக்க கூடாது எனவும், நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த பணிகளை நகராட்சி கமிஷனர் (பொ) ஹரிஹரன் தலைமையில் நகராட்சி சுகாதார அலுவலர் பாலசந்தர் முன்னிலையில் நகராட்சி ஆய்வாளர்கள் கருப்பசாமி, மாரிமுத்து, மாரிச்சாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் மேற்கண்ட பணியை கண்காணித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News