உள்ளூர் செய்திகள்

குப்பை அள்ளும் வாகனங்களின் பயன்பாட்டை நகரமன்ற தலைவர் புகழேந்தி தொடக்கி வைத்தார்.

குப்பைகள் அள்ளும் வாகனங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது

Published On 2023-06-25 13:36 IST   |   Update On 2023-06-25 13:36:00 IST
  • மக்கும் குப்பை, மக்கா குப்பை என தினமும் 12 டன் குப்பைகள் அள்ளப்படுகிறது.
  • 9 வண்டிகளும் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தன.

வேதாரண்யம்:

வேதாரண்யம் நகராட்சிக்கு ரூ. 65.70 லட்சம் செலவில் 15-வது நிதிக்குழு மானியத்தில் இருந்து திடக்கழிவு மேலாண்மை பணிக்கு 9 வாகனம் வாங்கபட்டது . இந்த வாகனங்களை பயன்பட்டிற்கு விடும் பணியினை நகரமன்ற தலைவர் புகழேந்தி தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராஹீம் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்பு இரண்டு டன் குப்பபைகளை அள்ளும் 9 வண்டிகளும் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தன.

இது குறித்து நகராட்சி ஆணையர் ஹேமலதா கூறும்போது ;-

இந்த வாகனங்கள் மூலம் நகராட்சியில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என நாள்தோறும் 12 டன் குப்பைகள் அள்ளபட்டு நகராட்சி குப்பை சேகரிக்கும் மையத்திற்கு எடுத்து செல்லபடும்.

அங்கு குப்பைகளை தரம் பிரித்து உரமாக்கி சலுகை விலையில் விலையில் வழங்கப்படும். மேலும் நகராட்சி பகுதியில் இனி குப்பைகள் தேங்காமல் உடனுக்குடன் அள்ளப்படும் என்றார்.

Tags:    

Similar News