உள்ளூர் செய்திகள்
- 1 கிலோ 100 கிராம் அளவில் இருந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல்.
- போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை ரெயிலடி கிட்டப்பா பாலம் அருகில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
பின்னர் அவரிடம், 1 கிலோ 100 கிராம் அளவில் இருந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பிடிபட்டவர், மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு சிவன்கோவில் தெருவை சேர்ந்த வைத்தியநாதன் (வயது 58) என்பது தெரியவந்தது.
இதனையடுத்து போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த மயிலாடுதுறை போலீசார் வைத்தியநாதனை கைது செய்தனர்.