உள்ளூர் செய்திகள்

வீரபாண்டி கோவிலில் மோதலில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.



வீரபாண்டி கோவில் திருவிழாவில் பக்தர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கும்பல் கைது

Published On 2023-05-15 11:05 IST   |   Update On 2023-05-15 11:05:00 IST
  • பக்தர்கள் போர்வையில் கோவிலுக்கு வரும் கும்பல் அவர்களது பணம் மற்றும் நகையை பறித்துச் செல்வதை தொடர்ந்து அரங்கேற்றி வந்தனர்.
  • கோவில் திருவிழாவில் இரு தரப்பினர் சேர்கள் மற்றும் உருட்டுக்கட்டைகளைக் கொண்டு கடுமையாக தாக்கிக் கொண்டவர்கள் யாரை யும்கைது செய்யவில்லை.

தேனி:

தேனி அருகே உள்ள வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு தேனி மாவட்டம் மட்டுமின்றி திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. பக்தர்கள் போர்வையில் கோவிலுக்கு வரும் கும்பல் அவர்களது பணம் மற்றும் நகையை பறித்துச் செல்வதை தொடர்ந்து அரங்கேற்றி வந்தனர். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் பக்தர்களிடம் பணம் பறித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (42) என்பவரிடம் வழிப்பறி செய்த கோம்பை துரைச்சாமிபுரத்தைச் சேர்ந்த முருகன் (40), தாடிச்சேரி கிழக்குத் தெருவைச் சேர்ந்த செல்வராஜிடம் பணம் பறித்த சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த மாரியப்பன் (59), திருப்பூர் சிவசாமியிடம் பணம் திருடிய கம்பம்எஸ்.டி.கே. நகரைச் சேர்ந்த அஜித்குமார் (24), பூசல்பட்டி சொசைட்டி தெருவைச் சேர்ந்த அஜித்கு மார், கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த குமரேசனிடம் பணம் பறித்த கம்பம் ஜவுளிக்கடை வீதியைச் சேர்ந்த நாகராஜன் (29) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே கோவில் திருவிழாவில் இரு தரப்பினர் சேர்கள் மற்றும் உருட்டுக்கட்டைகளைக் கொண்டு கடுமையாக தாக்கிக் கொண்டனர். இந்த வீடியோ சமூக வலைதள ங்களில் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் இது வரை மோதலில் ஈடுபட்ட யாரை யும் கைது செய்யவில்லை.

பிரசித்தி பெற்ற வீரபாண்டி திருவிழாவுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கி ன்றனர். இந்நிலையில் பக்தர்களிடம் வழிப்பறி செய்வது மற்றும் மோதலில் ஈடுபடும் சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது. எனவே பக்தர்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News