உள்ளூர் செய்திகள்

தென்காசியில் சாதனையாளர்களுக்கு காந்தி கலாம் சிறப்பு விருது

Published On 2023-06-29 14:06 IST   |   Update On 2023-06-29 14:06:00 IST
  • சங்கர் கணேஷ் என்பவருக்கு காந்தி கலாம் விருது வழங்கப்பட்டது.
  • பெரும்பாலான போட்டிகளில் நேரில் சென்று வீரர்களை சங்கர் கணேஷ் உற்சாகப்படுத்துகிறார்.

தென்காசி:

தமிழகத்தில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களை அழைத்து அவர்களை கவுரவிக்கும் விதமாக காந்தி கலாம் சிறப்பு விருது வழங்கும் நிகழ்ச்சி தென்காசியில் உள்ள தனியார் ஓட்டலில் செங்கோட்டை காந்தியவாதி விவேகானந்தன் தலைமையில் நடைபெற்றது.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த சங்கர் கணேஷ் என்பவருக்கு காந்தி கலாம் விருது வழங்கப்பட்டது. அதில் 45 வயதுடைய சங்கர் கணேஷ் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பூபால்ராஜாபட்டியை சேர்ந்தவர் ஆவார். விளையாட்டு வீரர்களுக்கான பரிசுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். ஆனால் பெரும்பாலான விளையாட்டுப் போட்டிகளில் நேரில் சென்று வீரர்களை உற்சாகப்படுத்தும் செயலையும் ஆர்வமுடன் செய்து வருகிறார்.

நாளிதழ் மற்றும் சுவரொட்டிகளின் மூலம் விளையாட்டுப் போட்டிகளை அறிந்து கொண்டு அங்கு நேரில் சென்று விளையாட்டு வீரர்களுக்கு தேவையானவற்றையும் முன் நின்று செய்து கொடுப்பார். எனவே இவருக்கு சிறந்த சேவையாளர் என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News