உள்ளூர் செய்திகள்

தஞ்சை பூக்காரத்தெரு சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி விழா 12-ந் தேதி தொடக்கம்

Published On 2023-11-07 10:25 GMT   |   Update On 2023-11-07 10:25 GMT
  • கார்த்திகை நட்சத்திரம் அன்றும் வளர்பிறை சஷ்டி அன்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
  • வருகிற 18-ந்தேதி சூரசம்ஹாரம் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் பூக்காரத் தெருவில் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது.

தஞ்சாவூர் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலாக இக்கோவில் திகழ்கிறது.

இத்தலத்தில் பக்தர்கள் திருமணம் நிச்சயதார்த்தம் செய்ய, முகூர்த்த ஓலை எழுத, திருமணம் செய்ய பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

இங்கு பிரதி கார்த்திகை நட்சத்திரம் அன்றும் வளர்பிறை சஷ்டி அன்றும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சகஸ்ரநாம அர்ச்சனை, தீபாராதனையும் நடக்கிறது.

இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் கந்த சஷ்டிப் பெருவிழா பத்து நாட்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலைப் போலவே இங்கும் நடைபெறுகிறது. அதன்படி வருகின்ற 12- ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் 23-ம்தேதி வரை கந்தர் சஷ்டி பெருவிழா நடைபெறுகிறது . 12-ம்தேதி பூர்வாங்கம், 13-ம்தேதி துவஜாரோகணம் (கொடியேற்றம்) அன்ன வாகனம் , 14-ம்தேதி மான் வாகனம், 15-ம்தேதி பூத வாகனம்,16-ம்தேதி யானை வாகனம்,17-ம்தேதி ரிஷப வாகனம் (பஞ்சமூர்த்திகள் எழுந்தருளள்), 18-ம்தேதி வெகுவிமரிசையாக சூரசம்ஹாரம், ஆடு ,மயில் வாகனம்,19-ம்தேதி திருக்கல்யாணம் மற்றும் முத்துப்பல்லக்கு, 20-ம்தேதி குதிரை வாகனம், 21-ம்தேதி திருத்தேர், 22-ம்தேதி தீர்த்தம் கொடுத்தல் மயில் வாகனம் துவஜாஅவஅராகணம் (கொடி இறங்குதல்), 23-ம்தேதி சிறப்பு அபிஷேகம் ஊஞ்சல் ஏகாந்த சேவை நடக்கிறது.

திருச்செந்தூர் சென்று கந்தசஷ்டி விரதம் இருக்க இயலாதவர்கள் இத்தலத்தில் கந்த சஷ்டி விரதம் இருந்து சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News