உள்ளூர் செய்திகள்

31-ந் தேதி கடை திறக்கும் வியாபாரிகளுக்கு முழு பாதுகாப்பு

Published On 2022-10-29 14:39 IST   |   Update On 2022-10-29 14:39:00 IST
  • வருகிற 31-ந் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு பாரதீய ஜனதா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
  • கடை திறப்பவர்களை மிரட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

குனியமுத்தூர்,

கோவை கார் வெடிப்பு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகிற 31-ந் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு பாரதீய ஜனதா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. போலீஸ் சார்பாக வியாபாரிகளுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையொட்டி போத்தனூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி வியாபாரிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. போலீஸ் உதவி கமிஷனர் சதீஷ்குமார் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். மேலும் அவர் பேசுகையில், கடை திறப்பவர்களை மிரட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து வியாபாரிகளும் வழக்கம்போல் கடை திறக்கலாம். காவல்துறை சார்பாக அவர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என்றார்.

மேலும் இக்கூட்டத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கதிர்வேல், சப் இன்ஸ்பெக்டர் தாமரைக்கண்ணன், குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் மற்றும் திரளான வியாபாரிகள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News