உள்ளூர் செய்திகள்
கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை
- முத்துமாரியம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
- சந்தன கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கதிரேசன் ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி வெற்றி விநாயகர், முத்துமாரியம்மன், சந்தன கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்ரமணிய அய்யர் செய்தார். இதில் சுற்று வட்டார மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் தலைவர் தங்கவேல், செயலாளர் மாரிச்சாமி, பொருளாளர் லட்சுமணன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.