என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Full Moon Special Pooja"

    • கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மாள் புற்றுக்கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை நடைப்பெற்றது.
    • மாலை 7 மணிக்கு 108 பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்தனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மாள் புற்றுக்கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை நடைப்பெற்றது. இதனையொட்டி காலையில் கணபதி பூஜையுடன் தொடங்கி கோடி சக்தி விநாயகர் வள்ளி, தேவசேனா சமேத கல்யாண முருகன், சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைப்பெற்றது.

    இதில் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 7 மணிக்கு 108 பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்தனர். சிறப்பு பூஜைகளை அர்ச்சகர் சுப்பிரமணிய அய்யர் செய்தார். ஏற்பாடுகளை வீரவாஞ்சிநகர் திருவிளக்கு பூஜை குழுவினர் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு, சுண்டல் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    • முத்துமாரியம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • சந்தன கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி கதிரேசன் ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி வெற்றி விநாயகர், முத்துமாரியம்மன், சந்தன கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்ரமணிய அய்யர் செய்தார். இதில் சுற்று வட்டார மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் தலைவர் தங்கவேல், செயலாளர் மாரிச்சாமி, பொருளாளர் லட்சுமணன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    ×