உள்ளூர் செய்திகள்

வெளி மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த 12 பேருக்கு கொரோனா

Update: 2022-08-18 10:30 GMT
  • 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • சேலம் வந்த 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவல் திடீரென அதிகரித்தும், குறைந்தும், வருகிறது. அந்த வகையில் நேற்று 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியில் 6 பேருக்கும், சேலம் சுகாதார மாவட்டத்தில் ஓமலூர், வீரபாண்டி, சேலம், தாரமங்கலம், எடப்பாடி பகுதி களில் 8 பேருக்கும், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் ஆத்தூர், அயோத்தியாப்பட்டணம் பகுதி களில் 2 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக்கல், கள்ளக்குறிச்சி, சென்னை மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News