உள்ளூர் செய்திகள்

கே.ஆர்.பி.அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து ஆலோசனை கூட்டம்

Published On 2022-06-21 15:04 IST   |   Update On 2022-06-21 15:04:00 IST
  • கூட்டம், கே.ஆர்.பி., அணை அலுவலகத்தில், உதவி செயற்பொறியாளர் அறிவொளி தலைமையில் நேற்று நடந்தது.
  • முதல்போக சாகுபடிக்கு வரும் ஜூலை 6-ந் தேதி முதல் 120 நாட்களுக்கு தண்ணீரைத் திறக்க அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் இருந்து 2022-23-ம் ஆண்டு முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவது குறித்த கலந்தாலோசனைக் கூட்டம், கே.ஆர்.பி., அணை அலுவலகத்தில், உதவி செயற்பொறியாளர் அறிவொளி தலைமையில் நேற்று நடந்தது.

இதில் கே.ஆர்.பி., அணை உதவி செயற்பொறியாளர் காளிப்பிரியன், பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவர் மற்றும் பேராசிரியர் பரசுராமன், பையூர் ஆராய்ச்சி நிலைய உழவியல் துறை பேராசிரியர் சிவக்குமார், கிருஷ்ணகிரி வேளாண்மை அலுவலர் பிரியா, காவேரிப்பட்டணம் வேளாண்மை அலுவலர் செந்தில்குமார், நீர்வ ளத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பாசன சங்கத் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்கு வரும் ஜூலை 6-ந் தேதி முதல் 120 நாட்களுக்கு தண்ணீரைத் திறக்க அரக்கு கோரிக்கை வைப்பது. தண்ணீர் பற்றாக்குறை இருப்பின் அவற்றினை தற்போது அணைக்கு வரும் நீர்வரத்து மற்றும் எதிர் வரும் மழை நீரைக் கொண்டு சரிசெய்து கொள்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், வரப்பு பயிரில் உளுந்து பயிடவும், நெல் தரிசுக்கு பிறகு உளுந்து, காராமணி பயிர் சாகுபடி செய்யவும், உயிர் உரங்கள் மற்றம் நுண்ணூட்ட உரங்கள் 50 சதவீத மானியத்தில் கிடைக்கும் எனவும் வேளாண்மை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Similar News