உள்ளூர் செய்திகள்

பல்லடம் தாலுகா அலுவலகத்திற்கு வந்த இலவச வேட்டி-சேலைகள்

Published On 2023-01-06 16:09 IST   |   Update On 2023-01-06 16:09:00 IST
  • இலவச வேட்டி சேலை, பச்சரிசி,கரும்பு, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குகிறது.
  • லவச வேட்டி,சேலைகளை ரேசன் கடைகளுக்கு அனுப்பும் பணி நடைபெறவுள்ளதாக வருவாய்துறையினர் தெரிவித்தனர்.

பல்லடம் :

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகஅரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலை, பச்சரிசி,கரும்பு, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குகிறது.

இந்த நிலையில் பல்லடம் வட்டாரத்தில் 56,888 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு வழங்க இலவச வேட்டி சேலைகள், தாலுகா அலுவலகத்துக்கு வந்தன. இதில் 27,000வேட்டிகள், 27,000 சேலைகள் வந்துள்ளன.

மேலும் மீதமுள்ள இலவச வேட்டி,சேலை இன்னும் சிலநாட்களுக்குள் வந்துவிடும் என்றும், இலவச வேட்டி,சேலைகளை ரேசன் கடைகளுக்கு அனுப்பும் பணி நடைபெறவுள்ளதாக வருவாய்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News