விளாத்திகுளம் அருகே மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம்
- பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது
- முகாமில் புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
விளாத்திகுளம்:
பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முகாமில் மருத்துவச் சான்றிதழ் வழங்குதல், தேசிய அடையாள அட்டைக்கான பதிவு மற்றும் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் முகாமில் வழங்கப்பட்டது.
முகாமை மாவட்ட திட்ட அலுவலர் பெர்சியால்ஞானமணி தொடங்கி வைத்தார். மாவட்ட மாற்றுத்திறன் நல அலுவலர் சிவசங்கரன் முன்னிலை வகித்தார். இம்முகாமில் புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
முகாமில் வட்டார கல்வி அலுவலர் முருகேஸ்வரி, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராஜசெல்வி, கிருஷ்ணவேணி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் சித்ரா, ஆசிரியர் பயிற்றுநர்கள் ராமர், பூவையா, ஜெயசுதா, மிதிலை குமாரி, சிறப்பு ஆசிரியர் பயிற்சிநர்கள் ஆரோக்கியராஜ், ஞானராஜ், அருள்மேரிசுதா, இல்லம் தேடி கல்வித் திட்டம் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். மருத்துவர்கள் சரவணவித்யா, பாலசுப்பிரமணியன், நிரஞ்சனாதேவி, பாண்டி பிரகாஷ், சிவப்பிரகாஷ் ஆகியோர் சிகிச்சை வழங்கினர்.