உள்ளூர் செய்திகள்

கலெக்டர் சாரூஸ்ரீ.

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இலவச மருத்துவ முகாம்; 24-ந் தேதி நடக்கிறது

Published On 2023-06-17 13:21 IST   |   Update On 2023-06-17 13:21:00 IST
  • காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
  • இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரூஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திகு றிப்பில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 100 இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, வருகிற 24-ந் தேதி ஆலங்கோட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி, மன்னார்குடி வட்டாரம் மற்றும் அரசினர் மேல்நிலைப்பள்ளி, காட்டூர், திருவாரூர் வட்டாரம் ஆகிய இடங்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

முகாமில் ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்கோ மற்றும் இசிஜி, பெண்க ளுக்கான மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பபை, வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை, முழு ரத்த பரிசோதனை, பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், பல் மருத்துவம், எலும்பு மருத்துவம், மனநலம் மருத்துவம், சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை உள்ளிட்ட பன்னோக்கு மருத்துவ பிரிவிலிருந்து சிறப்பு டாக்டர்களால் ஆலோசனைகள் வழங்கப்படும்.

இந்த இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி பயனடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Tags:    

Similar News