உள்ளூர் செய்திகள்

நகர்மன்ற தலைவர் சாதிர் பொதுமக்களுக்கு இலவச முக கவசங்களை வழங்கிய காட்சி.


தென்காசியில் பொதுமக்களுக்கு இலவச முககவசம்- நகர்மன்ற தலைவர் வழங்கினார்

Published On 2022-12-25 13:43 IST   |   Update On 2022-12-25 13:43:00 IST
  • இந்தியாவில் உருமாறிய கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
  • நகர்மன்ற தலைவர் சாதிர் நகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு இலவசமாக முக கவசங்களை வழங்கினர்.

தென்காசி:

இந்தியாவில் உருமாறிய கொரோனா பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடாமல் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் முக கவசத்தை அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகின்றனர். தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், துணைத் தலைவர் கே. என்.எல். சுப்பையா ஆகியோர் இணைந்து நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இலவசமாக முக கவசங்களை வழங்கினர். இதில் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News