உள்ளூர் செய்திகள்

மாணவிகளுக்கு இலவச சைக்கிளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கிய போது எடுத்தபடம்.

தூத்துக்குடியில் 339 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்-அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

Published On 2023-07-28 08:47 GMT   |   Update On 2023-07-28 08:47 GMT
  • அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு அமைச்சர் கீதாஜீவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
  • நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி சி.எம். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி தாளாளர் வள்ளியம்மாள் திருச்சிற்றம்பலம் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை சங்கரேஸ்வரி வரவேற்று பேசினார்.

இலவச சைக்கிள்கள்

நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலா ளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து 66 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். முன்னதாக அவர், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

விழாவில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சித்ரா, மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன், பகுதி செயலாளரும், கவுன்சிலருமான சுரேஷ்குமார், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், அறங்காவலர் குழு உறுப்பினர் மஞ்சுளா, தி.மு.க. வட்டச் செயலாளர் கீதா செல்வமாரியப்பன், வார்டு அவைத்தலைவர் கணேச பாண்டியன், வட்டப்பிரதிநிதிகள் இளங்கோ, பொன்ராஜ், செல்வக்குமார், பொரு ளாளர் பாஸ்கர் மற்றும் சுரேஷ்குமார், இளைஞர் அணி அருணாச்சலம், முன்னாள் கவுன்சிலர்கள் கந்தசாமி உள்பட பள்ளி ஆசிரியர்கள் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

கலந்து கொண்டவர்கள்

இதனைத் தொடர்ந்து காரப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 253 பேருக்கும், சி.வ. அரசு உயர்நிலைப்பள்ளியில் 20 பேருக்கும் என அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 339 மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் சைக்கிள் வழங்கினார்.

விழாவில் மாநில மீனவர் அணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், வடதிசை இந்துநாடார் மகமை பரிபாலன சங்க செயலாளர் விநாயக மூர்த்தி, தலைமை ஆசிரியர் லதா, மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், வட்டச் செயலாளர் டென்சிங் மற்றும் பாஸ்கர், அல்பட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News