உள்ளூர் செய்திகள்
மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
- முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் தியாகராஜன் அனைவரையும் வரவேற்றார்.
- 63 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டியில் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் யோகீஸ்வரன் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் தியாகராஜன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பள்ளி மேலாண்மை குழுவினர் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் 63 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் மதியழகன் நன்றி கூறினார்.