உள்ளூர் செய்திகள்

தஞ்சை மாநகராட்சியில் இலவச ஆம்புலன்ஸ் சேவை விரைவில் தொடக்கம் - மேயர் தகவல்

Published On 2022-06-15 15:39 IST   |   Update On 2022-06-15 15:39:00 IST
  • முக்கிய பகுதிகளில் அண்டர்கிரவுண்ட் மின் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது
  • மாநகராட்சி சார்பில் 2 இலவச அவசர ஆம்புலன்ஸ் மற்றும் ஓர் இலவச அமரர் ஊர்தி சேவைகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

தஞ்சாவூர்:

தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் நிருபர்களுக்குஅளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது:-

தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சியை மாற்றும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

தஞ்சை மாநகராட்சி பகுதியில் புதிதாக மேலும் ஒரு நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டாக்டர் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மூலம் 5000-க்கும் மேற்பட்டவர்கள் பலனடைந்துள்ளனர்.

10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சர்க்கரை, ரத்தக் கொதிப்பு , இருதய நோய் போன்ற தொற்றா நோய் உள்ளவர்களுக்கு அவரவர் வீடுகளுக்குச் சென்று மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுவதுடன் இயன் முறை மருத்துவ சிகிச்சை வீடுகளுக்கு சென்று வழங்கப்பட்டு வருகிறது.மாநகரில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் 2023-ம் ஆண்டுக்குள் முடிக்க ப்படும். மாநகரில் அனைத்து சாலைகளும் இன்னும் இரண்டு மாதத்தில் முடிக்கப்படும். முக்கிய பகுதிகளில் அண்டர்கிரவுண்ட் மின் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 15-வது மத்திய நிதி குழு மானிய நிதியின் கீழ் மாநகராட்சிப் பகுதியில் 8 எண்ணிக்கையிலான நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் ஒரு பொது சுகாதார ஆய்வகம் கட்டும் பணிகள் ரூ.2.22 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

திருமானூர் கொள்ளிடம் ஆற்றுப் படுகையில் இருந்து சுமார் 72 கோடி மதிப்பீட்டில் தினசரி 36 எம்.எல்.டி குடிநீரை மாநகராட்சி பகுதியின் பயன்பாட்டிற்கு கொண்டு வர பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 1400 சி.சி.டி.வி. கேமராக்கள் சுமார் ரூ.5.50 கோடி மதிப்பீட்டில் பொருத்தப்பட உள்ளன. மாநகராட்சி சார்பில் 2 இலவச அவசர ஆம்புலன்ஸ் மற்றும் ஓர் இலவச அமரர் ஊர்தி சேவைகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

நம்ம வார்டு நம்ம மேயர் என்ற திட்டத்தின் கீழ் தினமும் ஒவ்வொரு வார்டாக ஆய்வு செய்யபட்டு பொதுமக்களின் குறைகளை கேட்டு அறியப்பட்டு உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படுகிறது.மாநகராட்சி பகுதிகளில் 1 லட்சம் மரக்கன்றுகளை ஓராண்டுக்குள் நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை 5000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News