உள்ளூர் செய்திகள்

புதிய பஸ் நிலைய பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் மாவட்டசெயலாளர் சிவபத்மநாதன், தனுஷ்குமார் எம்.பி., ராஜா எம்.எல்.ஏ. மற்றும் பலர் கொண்ட காட்சி.


சங்கரன்கோவிலில் புதிய பஸ் நிலைய பணி அடிக்கல் நாட்டு விழா- மாவட்டசெயலாளர், எம்.பி, எம்.எல்.ஏ. பங்கேற்பு

Published On 2022-10-16 09:15 GMT   |   Update On 2022-10-16 09:15 GMT
  • புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
  • நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்ம நாதன் தலைமை தாங்கினார்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என இருந்துள்ளது.

தற்போது தமிழக அரசு நிறைவேற்றும் வகையில் சங்கரன்கோவிலில் மையப்பகுதியில் இயங்கி வந்த பழைய அண்ணா பஸ் நிலையம் கட்டிட உறுதி தன்மையை இழந்ததை அடுத்து அதனை இடித்து தற்போது அங்கு சுமார் ரூ. 9 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்ம நாதன் தலைமை தாங்கினார். தனுஷ் குமார் எம்.பி., ராஜா எம்.எல்.ஏ., சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கரபாண்டியன், சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், நகராட்சி பொறியாளர் ஹரிகரன், சுகாதார அலுவலர் பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து புதிய பஸ் நிலைய பணிகளை தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார். இதில் ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை, பெரியதுரை, மாவட்ட இளைஞரணி சரவணன், தொமுச நெல்சன், அரசு வழக்கறிஞர்கள் கண்ணன், ஜெயக்குமார், அரசு ஒப்பந்ததாரர்கள் மாரியப்பன், விக்னேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News