உள்ளூர் செய்திகள்

நீலகிரியில் காட்டெருமை தாக்கி வனக்காப்பாளா் காயம்

Published On 2022-10-31 14:40 IST   |   Update On 2022-10-31 14:40:00 IST
  • புதர்மறைவில் மறைந்து இருந்த காட்டெருமை திடீரென சசிதரனை தாக்கியது.
  • ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடி வனப்பகுதியில் வனதுறையினர் ரோந்து பணி சென்றனர். அப்போது புதர்மறைவில் மறைந்து இருந்த காட்டெருமை திடீரென சசிதரனை தாக்கியது.

இதில் அவா் படுகாயமடைந்தாா். உடனே அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு மசினகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனா். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சைஅளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News