உள்ளூர் செய்திகள்
மலைப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ.
ஒட்டன்சத்திரம் வனப்பகுதியில் காட்டுத்தீயில் மரங்கள் எரிந்து நாசம்
- காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பரவ ஆரம்பித்தது.
- தீயணைப்பு வீரர்கள் மற்றும் வனத்துறையினர் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்குட்பட்ட மலைப்பகுதியில் திடீரென தீ பிடித்து எரியத் தொடங்கியது. காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பரவ ஆரம்பித்தது. இது குறித்து தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் வனத்துறையினர் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். மேலும் தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டதால் ஒட்டன்சத்திரம் நகர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. பற்றி எரிந்த காட்டுத் தீயில் ஏராளமான மரங்கள் எரிந்து நாசமானது.