உள்ளூர் செய்திகள்

கடலூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதி சீட்டு வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த மக்களை படத்தில் காணலாம்.

பருவநிலை மாற்றம் எதிரொலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்: கடலூரில் பரபரப்பு

Published On 2023-07-03 08:53 GMT   |   Update On 2023-07-03 08:53 GMT
  • நேற்று முன்தினம் முதல் கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகின்றது.
  • பருவநிலை மாற்றம் காரணமாக இந்த திடீர் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் அதிகரித்து வருகிறது.

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் கோடை வெயில் தொடங்கி ஜூன் மாதம் வரையில் வெப்ப சலனம் காரணமாக சுட்டெரிக்கும் வெயில் மற்றும் அனல் காற்று வீசி வந்ததால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்து வந்தனர். மாவட்டம் முழுவதும் 102 முதல் 104 டிகிரி வெயில் அளவு பதிவான நிலையில் இரவு நேரங்களில் பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்து வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்த மழை வருகிற 5-ம் தேதி வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் ஒருபுறம் சுட்டெரிக்கும் வெயில், மறுபுறம் மழை பெய்து வருவதால் பருவநிலை மாற்றம் ஏற்பட்டுள்ள காரணத்தினால் பொது மக்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது.

இதையொட்டி இன்று காலை கடலூர் அரசு தலைமை மருத்துவமனை யில் ஆயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் உடல்நிலை பாதிப்பால் சிகிச்சை பெறுவதற்காக குவிந்தனர். மேலும் டோக்கன் விநியோகம் செய்யும் இடத்தில் நூற்றுக் கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் நீண்ட வரிசையில் காலை முதல் காத்திருந்து டோக்கன் பெற்றுக் கொண்டு அதன் பிறகு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறுவதற்கு அவசர அவசரமாக சென்றனர்.

இதன் காரணமாக கடலூர் அரசு மருத்துவமனை முழுவதும் இன்று காலை முதல் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வந்தது. பருவநிலை மாற்றம் காரணமாக இந்த திடீர் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் அதிகரித்த வண்ணம் இருந்து வருவதால் எந்தெந்த பகுதியில் இருந்து பொதுமக்கள் அதிகளவில் வருகிறார்கள் என்பதனை சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணித்து அந்த பகுதிக்கு நேரில் சென்று முகாம் அமைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். பொதுமக்களுக்கு தேவை யான உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் முன்னெச் சரிக்கை நட வடிக்கை கள் மேற்கொள்வது தொடர்பாக சுகாதாரத் துறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Tags:    

Similar News