உள்ளூர் செய்திகள்

சந்தூரில் உள்ள கடைகளில் பிளாஸ் டிக் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது என நோட்டீஸ் வினி யோகம் செய்யப்பட்டது.

சந்தூர் பகுதி கடைகளுக்கு மஞ்சப்பை பயன்படுத்த கோரி விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகம்

Published On 2022-07-09 15:11 IST   |   Update On 2022-07-09 15:11:00 IST
  • பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு ஜோரோக நடந்து வருவதாக குற்றச் சாட்டு எழுந்தது.
  • காட்டகரம் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் வழங்கினார்.

மத்தூர்,

நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்தது, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகாவில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு ஜோரோக நடந்து வருவதாக குற்றச் சாட்டு எழுந்தது.

இதையடுத்து போச்சம்பள்ளி வட்டம், சந்தூர் பகுதியில் பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது, அதற்கு மாற்றாக மஞ்சப்பை பயன்படுத்த கோரி, காட்டகரம் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் தலைமையில் அதிகாரிகள் சந்தூர் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சென்று விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகம் செய்தனர்.

இதில் மண் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுசிந்திரன், துணை தலைவர் கவுசல்யா மாதேஷ், ஊராட்சி செயலாளர் கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தால் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News