உள்ளூர் செய்திகள்

பிரதான கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்ட காட்சி. 

பாசனத்துக்காக உடுமலை அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

Published On 2022-06-27 05:42 GMT   |   Update On 2022-06-27 05:42 GMT
  • ஜூலை 11-ந்தேதி வரை 15 நாள்களுக்கு மொத்தம் 571 மில்லியன் கன அடி தண்ணீா் திறக்கப்பட உள்ளது
  • அணைக்கு உள்வரத்தாக 316 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது.

திருப்பூர் :

திருப்பூா் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.மேலும், நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது.

இந்நிலையில் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்குட்பட்ட ராஜவாய்க்கால்களான ராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், சா்க்காா் கண்ணாடிப்புத்தூா், சோழமாதேவி, கணியூா், கடத்தூா், காரத்தொழுவு ஆகிய 8 வாய்க்கால்களுக்கு மே 16-ந்தேதி தண்ணீா் திறக்கப்பட்டது.

இந்நிலையில் குடிநீா் தேவைகளுக்காகவும், நிலைப்பயிா்களை காப்பாற்றவும் புதிய ஆயக்கட்டு பாசனப்பகுதிகளுக்கு அணையில் இருந்து நேற்று தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

இது குறித்து பொதுப்பணித்துறையினா் கூறுகையில், நேற்று முதல் ஜூலை 11-ந்தேதி வரை 15 நாள்களுக்கு மொத்தம் 571 மில்லியன் கன அடி தண்ணீா் திறக்கப்பட உள்ளது என்றனா். தற்போது 90 அடி உயரமுள்ள அணையில் நீா்மட்டம் 67 அடியாக உள்ளது.அணைக்கு உள்வரத்தாக 316 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. 4047 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 2,182 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது. ஆற்றில் 250 கன அடி, பிரதான கால்வாயில் இருந்து 440 கன அடி என மொத்தம் 690 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. 

Tags:    

Similar News