உள்ளூர் செய்திகள்

சிங்கவரம் மலை மீது உள்ள ரங்கநாதர் கோவிலை சுற்றி பறந்த டிரோன் கேமராவால் பரபரப்பு

Published On 2023-07-27 12:54 IST   |   Update On 2023-07-27 12:54:00 IST
  • சிங்கவரம் கிராமத்தில் மலை மீது பிரசித்தி பெற்ற ரங்கநாதர் கோவில் உள்ளது.
  • கோவிலில் கொள்ளை அடிக்க சதி திட்டம் திட்டுகிறார்களா என்ற கோணத்தில் அறநிலைத்துறையினர் இது குறித்து செஞ்சி போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

விழுப்புரம்:

செஞ்சியிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் சிங்கவரம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் மலை மீது பிரசித்தி பெற்ற ரங்கநாதர் கோவில் உள்ளது. இதுமிகவும் பழமை வாய்ந்ததாகும். கோவிலில் கற்பாறையால் ஆன மூலவர் மட்டுமல்லாமல் பஞ்சலோக சிலைகள் வைத்து வழிபாடு நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு 7.25 மணியளவில் கோவில் உள்ள மலை மீது டிரோன் கேமரா ஒன்று பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த டிரோன் சுமார்10 நிமிடங்கள் பறந்து அப்பகுதியை படம் எடுத்துக் கொண்டிருந்தது. பின்னர் மலையின் பின்பகுதியில் டிரோன் கேமரா மறைந்து விட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சமூக விரோதிகள் யாராவது கோவிலில் கொள்ளை அடிக்க சதி திட்டம் திட்டுகிறார்களா என்ற கோணத்தில் அறநிலைத்துறையினர் இது குறித்து செஞ்சி போலீசில் புகார் கொடுத்துள்ளனர். செஞ்சி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். இதேபோல் சிங்கவரத்தை அடுத்த மேளச்சேரி காப்புக்காட்டில் உள்ள பச்சையம்மன் கோவிலை சுற்றியும் டிரோன் பறந்ததாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News