பா.ஜ.க. சார்பில் கொடியேற்று நிகழ்ச்சி
- பா.ஜ.க கொடியேற்று விழா ஒன்றிய தலைவர் சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
- மாவட்ட தலைவர் பாஸ்கர் எம்.எல்.ஏ கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வடக்கு ஒன்றியம் மாதேஹள்ளி மற்றும் ஓ.ஜிஹள்ளி ஆகிய ஊர்களில் பா.ஜ.க கொடியேற்று விழா ஒன்றிய தலைவர் சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் மாவட்ட தலைவர் பாஸ்கர் எம்.எல்.ஏ கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார்.நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலா ளர்கள் ஐஸ்வர்யம் முருகன், வெங்கட்ராஜ் மாவட்ட துணை தலைவர் சோபன் மற்றும் மாவட்ட செயலாளர் தெய்வமணி குமார் மற்றும் தொழிற்பிரிவு கிருஷ்ணன், தருமபுரி வடக்கு ஒன்றிய தலைவர் நாகராஜ் , நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய தலைவர் மாதன், ஒன்றிய பொதுச் செயலாளர் ஆறுமுகம், மாவட்ட ஓபிசி அணி செயலாளர் கல்யாண சுந்தரம், கூட்டுறவு பிரிவு செயலாளர் மணி, ஒன்றிய பொருளாளர் பச்சையப்பன், ஒன்றிய செயலாளர்கள் முருகன் ,சந்தோஷ், திருப்பதி, ஓ பி சி அணி ஒன்றிய தலைவர் டி.பி முருகன், மாவட்ட ஒன்றிய அணி மற்றும் அணிபிரிவு நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள், மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை ஒன்றிய இளைஞர் அணி தலைவர் ராம கிருஷ்ணன் மற்றும் கிளை தலைவர்கள் மாதேஅள்ளி தினேஷ் குமார், சம்பத், மாரியப்பன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.