உள்ளூர் செய்திகள்

மீன் பிடிக்க மீனவர்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் காட்சி.

மணப்பாடு கடற்கரையில் உருவாகும் மணல் திட்டுகளால் மீன்பிடிக்க முடியாமல் மீனவர்கள் அவதி

Published On 2022-06-17 13:14 IST   |   Update On 2022-06-17 13:14:00 IST
  • மணல்திட்டால் படகுகளை தள்ளமுடியாமல் மீனவர்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
  • அனைத்திற்கும் ஒரே தீர்வு தூண்டில் வளைவு மட்டுமே.

உடன்குடி:

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள மணப்பாடு கடற்கரை கிராமத்தில் மீனவ மக்கள் அதி கமாக வசித்து வருகின்றனர். இங்கு உள்ள 90 சதவீத மக்கள் மீன்பிடி தொழிலை செய்து வருகின்றனர். சுமார் 500 குடும்பத்தினர் இத்தொழிலை நம்பி தான் வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலான மீனவர்கள் நாட்டுபடகுகள், கட்டுமரம் வைத்து தான் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

கடற்கரையில் தொடர்ந்து ஏற்படும் மணல் திட்டுகளால் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சுற்றி தான்மீன்பிடிக்க செல்கின்றனர். படகுகளை கரைக்கு கொண்டு வர முடியாமல் திண்டாடுகின்றனர். மேலும் கடலில் பிடித்த மீன்களை ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு தலையில் சுமந்து கொண்டு வருவது மிக மிக வேதனையாக உள்ளது.

மணல்திட்டால் படகுகளை தள்ளமுடியாமல் மீனவர்கள் கடும் அவதி படுகின்றனர். இவை அனைத்திற்கும் ஒரே தீர்வு தூண்டில் வளைவு மட்டுமே. எனவே உடனடியாக தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் விரும்புகின்றனர்.

Tags:    

Similar News