உள்ளூர் செய்திகள்
கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ்.
மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது
- கூட்டுறவு சங்க தலைவர்கள் மற்றும் உள்நாட்டு மீனவர்கள் கலந்து கொள்ளலாம்.
- அடிப்படை தேவைகள், மீன்வளம் மற்றும் இதர துறை சார்ந்த கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிரு ப்பதாவது:-
நாகை மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட கூட்டரங்கத்தில் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27-ந் தேதி காலை 10.30 மணிக்கு கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்தார்கள்/கூட்டுறவு சங்க தலைவர்கள் மற்றும் உள்நாட்டு மீனவர்கள் கலந்து கொண்டு தங்களது கிராமத்தில் உள்ள அடிப்படை தேவைகள், மீன்வளம் மற்றும் இதர துறை சார்ந்த கோரி க்கைகளை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.