உள்ளூர் செய்திகள்

நேற்றைய ஆட்டத்தில் மோதிய சென்னை ஜிஎஸ்டி- செகந்திராபாத் அணிகள்.

அகில இந்திய ஆக்கி முதல் அரை இறுதி போட்டி: பஞ்சாப் நேஷனல் வங்கி- டெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணிகள் மோதல்- நாளை மாலை நடக்கிறது

Published On 2023-05-26 08:55 GMT   |   Update On 2023-05-26 08:55 GMT
  • லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 12-வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் கடந்த 18-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
  • நேற்று இரவு நடைபெற்ற 3-வது காலிறுதி போட்டியில் நியூ டெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணியும், பெங்களூரு கனரா வங்கி அணியும் மோதின.

கோவில்பட்டி:

கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 12-வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் கடந்த 18-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

11 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 சிறந்த அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

காலிறுதி போட்டிகள்

8-ம் நாளான நேற்று காலை தொடங்கிய முதல் காலிறுதி போட்டியில் நியூ டெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும், கோவில்பட்டி ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் ஆப் எக்ஸலன்ஸ் எஸ்டிஏடி அணியும் மோதின.

இதில் இரு அணிகளும் தலா இரு கோல்கள் போட்டு சமநிலை பெற்றன, பின்னர் வெற்றியை தீர்மானிக்க ஷூட் அவுட் முறை பின்பற்றப்பட்டது. இதில் 4:3 என்ற கோல் கணக்கில் ஷூட் அவுட் முறையில் நியூ டெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

மாலையில் நடைபெற்ற இரண்டாவது காலிறுதி போட்டியில் நியூ டெல்லி காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணியும், சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியும் மோதின.

இதில் 4:3 என்ற கோல் கணக்கில் நியூ டெல்லி காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணி வெற்றிப் பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

3,4-வது காலிறுதி போட்டிகள்

நேற்று இரவு நடைபெற்ற 3-வது காலிறுதி போட்டியில் நியூ டெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணியும், பெங்களூரு கனரா வங்கி அணியும் மோதின.

இதில் 4:0 என்ற கோல் கணக்கில் நியூ டெல்லி, பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணி வெற்றிப பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இரவு 9 மணிக்கு நடைபெற்ற 4-வது காலிறுதி போட்டியில் செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரெயில்வே அணியும், சென்னை ஜிஎஸ்டி-சென்ட்ரல் எக்ஸைஸ் அணியும் மோதின.

இதில் 5:1 என்ற கோல் கணக்கில் செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரெயில்வே அணி வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

நாளை அரையிறுதி போட்டிகள்

நாளை ( சனிக்கிழமை) மாலை நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும், நியூ டெல்லி, பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணியும் மோதுகின்றன.

2-வது அரையிறுதி போட்டியில் நியூ டெல்லி காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணியும், செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரெயில்வே அணியும் மோதுகின்றன.

Tags:    

Similar News