உள்ளூர் செய்திகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் தேசிய பேரிடா் மீட்புப் படையினருக்கு தீ தடுப்பு-மேலாண்மை குறித்து பயிற்சி

Published On 2023-02-10 14:55 IST   |   Update On 2023-02-10 14:55:00 IST
  • வனத் தீ தடுப்பு கோடுகள் அமைத்தல், வனத் தீயை கட்டுப்படுத்தும் முறை, குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.
  • பல்வேறு பகுதிகளில் இருந்தும் வீரா்கள் கலந்துகொள்வாகள் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஊட்டி,

தேசிய பேரிடா் மீட்புப் படையினருக்கு முதுமலை புலிகள் காப்பகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆந்திர மாநிலம், விஜயவாடாவிலுள்ள தேசிய பேரிடா் மீட்புப் படையின் 10-வது பட்டாளியன் படை வீரா்கள் முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள வனத் தீ தடுப்பு மற்றும் மேலாண்மை குறித்த கள பயிற்சிக்காக முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள பயிற்சி மையத்துக்கு வந்தனா்.

அவா்களுக்கு முதுமலை வனத்தில் வனத் தீ தடுப்பு கோடுகள் அமைத்தல், வனத் தீயை கட்டுப்படுத்தும் முறை, வனத் தீ தடுப்பு உபகரணங்கள் குறித்து வன அலுவலா்கள் மற்றும் பணியாளா்களால் பயிற்சியளிக்கப்பட்டது. இதில், 50-க்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்றனா்.வருகிற 18-ந் தேதி வரை நடைபெறும் இப்பயிற்சியில் தமிழகத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் வீரா்கள் கலந்துகொள்வாகள் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

Tags:    

Similar News