உள்ளூர் செய்திகள்

தீயணைப்புத்துறையினர் விழிப்புணர்வு முகாம் நடத்திய போது எடுத்த படம் 

ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் தீயணைப்புத்துறை விழிப்புணர்வு முகாம்

Published On 2022-10-19 08:52 GMT   |   Update On 2022-10-19 08:52 GMT
  • மாணவர்களுக்கு தீபாவளி அன்று பட்டாசை எவ்வாறு கையாளுவது, தீக்காயம் பட்டவர்களை எவ்வாறு மீட்டெடுப்பது குறித்து விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது
  • சிறப்பு விருந்தினராக மாவட்ட தீயணைப்புத்துறை துணை அலுவலர் சுரேஷ் ஆனந்த் கலந்து கொண்டார்

தென்காசி:

செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீயணைப்புத்துறையினர் விழிப்புணர்வு முகாம் நடத்தினர்.

முகாமில் மாணவர்களுக்கு தீபாவளி அன்று பட்டாசை எவ்வாறு கையாளுவது, தீக்காயம் பட்டவர்களை எவ்வாறு மீட்டெடுப்பது, தீப்பிடித்து எரிந்தால் எவ்வாறு அணைப்பது மற்றும் அவசர உதவிக்கு தீயணைப்பு துறையை அணுக வேண்டிய தொலைபேசி எண் போன்ற மிக முக்கியமான விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட தீயணைப்புத்துறை துணை அலுவலர் சுரேஷ் ஆனந்த் கலந்து கொண்டார். பள்ளி தாளாளர் ஷேக் செய்யது அலி மற்றும் முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை செங்கோட்டை தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் சிவசங்கரன் செய்திருந்தார்.

Tags:    

Similar News