உள்ளூர் செய்திகள்

நிதி உதவி வழங்கியபோது எடுத்த படம்.

திசையன்விளை காங்கிரஸ் பிரமுகர் குடும்பத்திற்கு நிதி உதவி

Published On 2022-07-09 08:42 GMT   |   Update On 2022-07-09 08:42 GMT
  • காங்கிரஸ் பிரமுகர் மகள் எலும்பு முறிவு காரணமாக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
  • மாநில விவசாய அணிசெயலாளர் விவேக் முருகன் அதற்கான நிதி உதவியை சிங்கை முருகனிடம் வழங்கினார்.

திசையன்விளை:

காங்கிரஸ் பிரமுகர் சிங்கை முருகன். இவருடைய மகள் எலும்பு முறிவு காரணமாக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரின் மருத்துவ செலவிற்காக நெல்லை கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் அமுதா கார்த்திகேயன் சார்பில் மாநில விவசாய அணிசெயலாளர் விவேக் முருகன் அதற்கான நிதி உதவியை சிங்கை முருகனிடம் வழங்கினார்.

அப்போது ராதாபுரம் வட்டார காங்கிரஸ் தலைவர் பவான்ஸ், வள்ளியூர் நகர காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராஜேஷ், பணகுடி ராஜ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News