நிதி உதவி வழங்கப்பட்ட காட்சி.
ஸ்காட் நிர்மான் சார்பில் மகளிர், மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்கு நிதி உதவி
- ஸ்காட் கல்வி நிறுவனங்களின் ஓர் அங்கம் ஸ்காட் நிர்மான் அமைப்பு ஆகும்.
- நிதி உதவியினை ஸ்காட் குழும பள்ளிகளின் தாளாளர் தர்ஷினி அருண்பாபு வழங்கினார்.
நெல்லை:
ஸ்காட் கல்வி நிறுவனங்களின் ஓர் அங்கமான ஸ்காட் நிர்மான் அமைப்பின் மூலம் கிராமங்களில் ஏழை, ஆதரவற்ற பெண்களுக்கு ஆடுவளர்ப்பு, கோழி வளர்ப்பு போன்றவற்றிற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு செல்போன்சர்வீஸ், கடை, வெல்டிங் பட்டறை, இரு சக்கரவாகன பழுதுநீக்கும் கடை போன்றவற்றிற்கும் சுமார் ரூ.20 லட்சம் நிதி உதவியை 100-க்கும் மேற்பட்டோருக்கு வண்ணார்பேட்டை எப்.எக்ஸ் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.
இந்தநிதி உதவியினை ஸ்காட் குழும பள்ளிகளின் தாளாளர் தர்ஷினி அருண்பாபு வழங்கினார். திட்டம் குறித்த விளக்கத்தை ஸ்காட் நிர்மான் இயக்குநர் சார்லஸ் எடுத்துரைத்தார். விழாவில் எப்.எக்ஸ். கல்லூரி முதல்வர் வேல்முருகன், பொதுமேலாளர்கள் ஜெயக்குமார் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ராஜேஷ் வரவேற்று பேசினார். முடிவில் சுந்தர் நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்காட் நிறுவனங்களின் தலைவர் கிளிட்டஸ்பாபு, துணைத்தலைவர் டாக்டர் அமலிகிளிட்டஸ்பாபு ஆகியோரின் வழிகாட்டுதலில் ஸ்காட் நிர்மான் இயக்குநர் சார்லஸ் மற்றும் அனைத்து பணியாளர்களும் செய்திருந்தனர்.