ஆட்டோ டிரைவரை விபசாரத்துக்கு அழைத்த பெண் புரோக்கர் கைது
- வீட்டு முன்பு நின்று கொண்டு இருந்த பெண் ஒருவர் சைகை காட்டி பூபதியை அழைத்தார்.
- ஏ.டி.எம். மையத்துக்கு சென்று பணம் எடுத்து வருவதாக கூறி வெளியே சென்று போலீசில் புகார் அளித்தார்
கோவை,
திருப்பூர் மாவட்டம் நெல்லிபாளையத்தை சேர்ந்தவர் பூபதி (வயது 34). ஆட்டோ டிரைவர்.
சம்பவத்தன்று இவர் அன்னூர் அருகே உள்ள காந்தி காலனி வழியாக வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்குள்ள வீட்டு முன்பு நின்று கொண்டு இருந்த பெண் ஒருவர் சைகை காட்டி பூபதியை அழைத்தார்.
இதனையடுத்து அவர் அந்த பெண்ணின் அருகே சென்று என்னவென்று கேட்டார். அதற்கு அந்த பெண் தன்னுடைய வீட்டில் அழகிகள் இருப்பதாகவும், பணம் கொடுத்தால் ஜாலியாக உல்லாசம் அனுபவிக்கலாம் என ஆசை வார்த்தை கூறினார். இதனையடுத்து பூபதி அந்த பெண் அழைத்த வீட்டிற்குள் சென்றார். அங்கு 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை காண்பித்து இவரிடம் உல்லாசமாக இருக்க ரூ.1000 வேண்டும் என கேட்டார்.அதற்கு ஆட்டோ டிரைவர் தன்னிடம் பணம் இல்லை எனவும், அருகே உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு சென்று பணம் எடுத்து வருவதாக கூறி வெளியே சென்றார். பின்னர் அவர் இது குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் விபசாரம் நடப்பதாக ஆட்டோ டிரைவர் கூறிய வீட்டிற்கு விரைந்து சென்றனர். வீட்டில் அழகிகளை வைத்து விபசார தொழில் செய்து வந்த மதுரையை சேர்ந்த பெண் புரோக்கர் அம்சவள்ளி (வயது 41) என்பவரை கைது செய்தனர். பின்னர் போலீசார் விபசாரத்துக்காக வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த திருப்பூரை சேர்ந்த 2 அழகிகளை மீட்டனர்.
இதனையடுத்து அழகிகளை போலீசார் காப்பகத்தில் அடைத்தனர். அழகிகளை வைத்து வீட்டில் விபசார தொழில் செய்து வந்த பெண் புரோக்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.