உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

திண்டுக்கல்லில் மகனை கத்தியால் குத்திய தந்தைக்கு வலை

Published On 2023-07-26 12:03 IST   |   Update On 2023-07-26 12:03:00 IST
  • குடிபோதையில் தகராறு செய்த மகனை ஆத்திரமடைந்த தந்தை கத்தியால் குத்தினார்.
  • வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் தெய்வ சிகாமணிபுரத்தைச் சேர்ந்த வர் வளன் பிராங்கிளின். கூலித் தொழிலாளி. இவரது மகன் பிரகாஷ் (வயது20). மது போதைக்கு அடிமை யானவர். பிரகாஷ் குடித்து விட்டு மது போதையில் குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு வருவது வழக்கம்.

அதன்படி நேற்று இரவு தந்தையுடன் போதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது கோபமடைந்த தந்தை வளன் பிராங்களின், கத்தியால் பிரகாசை குத்தினார்.

இதில் தாடையில் விழுந்த கத்தி குத்துடன் ரத்த வெள்ளத்தில் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரகாஷ் அனுமதிக்க ப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச் சம்பவம் குறித்து நகர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News