உள்ளூர் செய்திகள்

வேதாரண்யத்தில் விவசாயிகளுடன் தாசில்தார் ரவிச்சந்திரன் பேச்சுவார்த்தை நடந்தது.

குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்

Published On 2022-07-03 09:36 GMT   |   Update On 2022-07-03 09:36 GMT
  • இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்ய கோரியும் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்த திரண்டனர்.
  • ஆர்ப்பாட்டம் நடத்தாமல் கோரிக்கை மனுவினை தாசில்தார் ரவிச்சந்திரனை சந்தித்து விவசாயிகள்அளித்தனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா அலுவலகம் முன்பு எள், பயிறு, உளுந்து சாகுபடி பயிர்களுக்கு நிவராணம் கேட்டும், இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்ய கோரியும் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்நடத்த வட்டாரவிவசாய சங்க தலைவர் ராஜன், விவசாய சங்க செயலாளர் ஒளிச்சந்திரன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

அதனை தொடர்ந்து வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதையடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தாமல் கோரிக்கை மனுவினை தாசில்தார் ரவிச்சந்திரனை சந்தித்து விவசாயிகள்அளித்தனர் .

பின்னர் மண்டல துணை தாசில்தார் ரமேஷ், சமூக நல தாசில்தார் ரவி, துணை தாசில்தார் வேதையன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி னர். அப்போது இப்பிரச்சினைகுறித்து நாளை தாலுகா அலு வலகத்தில்வி வசாயிகள், வேளா ண்மைதுறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி முடிவு செய்யபடும் என தாசில்தார் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

Tags:    

Similar News