உள்ளூர் செய்திகள்

சேதமடைந்த பயிர்கள்.

நெற்பயிர்களை சேதப்படுத்தும் பன்றிகளால் விவசாயிகள் அவதி

Published On 2023-01-20 09:53 GMT   |   Update On 2023-01-20 09:53 GMT
  • நெல் வயல்களில் பன்றிகள் கூட்டம் புகுந்து நாசம் செய்து விடுகிறது.
  • பெரிய அளவில் மகசூல் இழப்பும் நட்டமும் ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளது.

பூதலூர்:

திருக்காட்டுப்பள்ளி திருவையாறு சாலையில் மகாராஜபுரம் கிராமம் அமைந்துள்ளது.

காவிரி - கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ள இந்த கிராமத்தில் காவிரி ஆற்றுநீரை கொண்டு விவசாயம் நடைபெற்று வருகிறது. நிலத்தடி நீர்மட்டம் நல்ல நிலையில் உள்ளதால் ஆழ்துளை கிணறுகள் மூலமும் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.

தற்போது இந்த கிராமத்தில் உள்ள வயல்களில் நெல் பயிர் கதிர் விட்டு நல்ல நிலையில் உள்ளது.

இந்நிலையில் நெல் வயல்களில் பன்றிகள் கூட்டம் புகுந்து நாசம் செய்து விடுகிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயி கணேசன் கூறுகையில் நான் 12 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் ஆத்தூர் கிச்சடி ,தூயமல்லி, வெள்ளைப் பொன்னி ஆகிய நெல்ரகங்களை விவசாயம் செய்து உள்ளார்.

தற்போது நெல் பயிர் நல்ல முறையில் வளர்ந்து கதிர் விட்டு இன்னும் 10 அல்லது 12 நாட்களில் அறுவடை செய்யப்படும் நிலையில் இருந்தது.

இது போன்றசூழ்நிலையில் வயல்களில் இரவு நேரங்களில் திடீரென்று பன்றிகள்கூட்டமாக புகுந்து நாசம் செய்து விடுகிறது. இதனால் பயிர்கள் கடும் சேதம் அடைந்து உள்ளது.

பன்றிகள் அங்குமிங்கு வயலில் ஓடுவதால் பயிர்கள் சேரோடு சேராக அமிழ்ந்து போய் அறுவடை இயந்திரத்தின் மூலம் அறுவடை செய்ய இயலாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

இதனால் பெரிய அளவில் மகசூல் இழப்பும் நட்டமும் ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளது என்றார்.

எனவே பாதிக்கப்பட்ட அப்பகுதி வயல்களை விவசாய அதிகாரிகள் வருவாய் துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிக்கு உரிய இழப்பீடு தொகை கிடைப்பதற்கு ஆவன செய்ய வேண்டும், பன்றிகள் கூட்டம் வயலில் இறங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகளுகம், அப்பகுதி சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News