ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
கும்பகோணத்தில், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
- மின் இணைப்பிற்காக கோயில் நிர்வாகம் தடையின்றி சான்றிதழ் வழங்க வேண்டும்.
- பந்தநல்லூரில் டிராக்டர் வாகனங்களை கொண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் பந்தநல்லூரில் அனைத்து விவசாய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு உழவர் பேரியக்கம் மாநிலதலைவர் ஆலயமணி தலைமை தாங்கினார்.
இந்த ஆர்பாட்டத்தில் நடுவர் மன்ற தீர்ப்பை மதிக்காமல் தமிழகத்திற்கு போதிய நீரை வழங்காத கர்நாடக அரசை கண்டித்தும், பந்தநல்லூர் பகுதிக்கு குறைந்த மின்னழுத்தம் வழங்குவதால் விவசாய மோட்டார் இயங்காமல் உள்ளதாகவும் உயர் மின்ன ழுத்த வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கருகி வரும் நெற்பயிருக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்க வேண்டும் எனவும், கோயில் நிலங்களில் உள்ள வீடுகளுக்கும் விவசாய பம்பு செட்டுகளுக்கும் மின் இணைப்பிற்காக கோயில் நிர்வாகம் தடை இன்றி சான்றிதழ் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
விவசாயிகள் ஒன்றி ணைந்து பந்தநல்லூர் கடை வீதியில் 50-க்கும் மேற்ப்பட்ட டிராக்டர் வாகனங்களை கொண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் பொன். மனோகரன்,விவசாய சங்கம் நிர்வாகிகள் கலைமணி, கலியமூர்த்தி திருஞானம்பிள்ளை, கரும்பு விவசாயிகள் சங்கம் காசிநாதன் உள்பட திராளான பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.