ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
பூதலூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
- விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
பூதலூர்:
பூதலூர் நான்கு சாலை சந்திப்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கம் இணைந்து
2022-23 ம் ஆண்டிற்கான சம்பா சாகுபடிக்கு காப்பீடு செய்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயி களுக்கும் பயிர் இழப்பீடு வழங்காததை கண்டித்து கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்ட த்திற்கு பூதலூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் பாஸ்கர் தலைமை வகித்தார்.விவசாய சங்க நிர்வாகிகள் ராமலிங்கம், சுந்தரவடிவேல், கண்ணன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராமலிங்கம் மற்றும் விவசாயிகள் கலந்து கொ ண்டு கண்டன கோஷங்களை முழங்கினர். பாதிக்கப்பட்ட அனை வருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்,
பயிர் காப்பீடு என்கிற பெயரில் விவசாயிகளை வஞ்சிக்கும் நிறுவனங்களை தவிர்த்து, ஏற்கனவே இருநததுபோல் அரசு காப்பீட்டு நிறுவனங்களை ஈடுபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகளை வலியுறுத்தினார்.