உள்ளூர் செய்திகள்
விழுப்புரத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 30-ந் தேதி நடக்கிறது.
- குறைதீர்க்கும் நாள் கூட்டம் கடந்த 26-ந் தேதி நடைபெறுவதாக அறிக்கை வெளியிடப்பட்டது.
- மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மே 2023-ம் மாதத்திற்குரிய விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கடந்த 26-ந் தேதி நடைபெறுவதாக அறிக்கை வெளியிடப்பட்டது. தற்ேபாது நிர்வாக காரணங்களை முன்னிட்டு, வருகிற 30-ந்தேதி (செவ்வாய்கிழமை) காலை 11 மணி அளவில் மாவட்ட கலெக்டர் பழனி தலைமையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும், விவசாயிகளும் கலந்து கொண்டு விவசாயம் சம்மந்தப்பட்ட கோரிக்கைகளை மனுவாக கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.