உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் பேசினார்.

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

Published On 2022-09-23 08:03 GMT   |   Update On 2022-09-23 08:03 GMT
  • முள்ளியாறு நீர் நிலைகளில் வளர்ந்துள்ள வெங்காய தாமரை செடிகளை அகற்றப்படாதவை குறித்து பேசினர்.
  • வடகிழக்கு பருவமழை தொடக்க நிலையிலேயே வெள்ள பாதிப்பு வர வாய்ப்புள்ளது.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் தலைமை வகித்தார். சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் முன்னோடி விவசாயி மணியன், சி.பி.ஐ. மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன் மற்றும் குழந்தைவேல் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் பகுதி பிரச்சினைகள் குறித்து பேசினர்.

மாணங்கொண்டான் முள்ளியாறு நீர் நிலைகளில் வளர்ந்துள்ள வெங்காய தாமரை செடிகளை அகற்றப்படாதவை குறித்து பேசினர்.

வடகிழக்கு பருவமழை தொடக்க நிலையிலேயே வெள்ள பாதிப்பு வர வாய்ப்புள்ளதால் விவசாயம் பாதிப்புக்குள்ளாகும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

எனவே, இதை தவிர்க்க ஆறுகளில் உள்ள வெங்காய தாமரை ெசடிகளை அகற்றி சீர் செய்ய வேண்டும் என விவசாயிகள் கேட்டு கொண்டனர்.

கடந்த கூட்டத்தில் பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எடுக்கப்பட்ட முதற்கட்ட நடவடிக்கை குறித்து அரசுத்துறை அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News