உள்ளூர் செய்திகள்
நெல்நடவு பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.
நிலக்கோட்டை பகுதியில் நெல்நடவு பணியில் விவசாயிகள் மும்முரம்
- வைகை அணையில் இருந்து பெரியாறு பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது.
- திண்டுக்கல் மாவட்ட சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயிகள் நெல்நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நிலக்கோட்டை:
வைகை அணையில் இருந்து பெரியாறு பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதனைஏற்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனால் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, விளாம்பட்டி, அணைப்பட்டி, ராமராஜபுரம், மட்டப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயிகள் நெல்நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக நிலத்தை சீரமைத்து மாடுகளை கொண்டு உழவு பணியில் ஈடுபட்டனர். தற்போது நெல்நடவு பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல்சாகுபடி செய்து வருகின்றனர்.
தற்போது கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் பணிகள் வேகமடைந்துள்ளன. இதனால் நல்ல விளைச்சல் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.