உள்ளூர் செய்திகள்

ஆழ்வார்திருநகரி ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் பூலான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

தென்திருப்பேரையில் கடம்பாகுளத்தை முழுமையாக தூர்வார கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-09-29 14:23 IST   |   Update On 2023-09-29 14:23:00 IST
  • ஆர்ப்பாட்டத்தில் கடம்பாகுளத்தை முழுமையாக தூர்வாரிட கோரி கோஷங்கள் எழுப்பபட்டது.
  • ஆர்ப்பாட்டத்திற்கு ஆழ்வார்திருநகரி ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் பூலான் தலைமை தாங்கினார்.

தென்திருப்பேரை:

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஆழ்வார்திருநகரி ஒன்றியம் விவசாயிகள் சங்கம் சார்பில் தென்திருப்பேரை மெயின்ரோடு கால்நடை மருத்துவமனை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கடம்பாகுளத்தை முழுமையாக தூர்வாரிடவும், கடம்பா குளத்தில் தற்போது நடைபெற்று வரும் மராமத்து பணிகளை மழைக் காலத்திற்கு முன்பே விரைந்து தரத்தோடு நிறைவு செய்திடவும் மாவட்ட வருவாய் நிர்வாகத்தை கண்டித்தும், பொதுப்பணி நிர்வாகத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பபட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஆழ்வார்திருநகரி ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் பூலான் தலைமை தாங்கினார். ஆழ்வார்திருநகரி ஒன்றிய தமிழ்நாடு விவசாய சங்க செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் புவிராஜ், மாவட்ட தலைவர் ராகவன், மாவட்ட பொருளாளர் நம்பிராஜன், மாவட்ட துணைத் தலைவர் சீனிவாசன், ஆழ்வை ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட பொறுப்பாளர் ராமையா, கடம்பாகுள பாசன ஆயக்கட்டு விவசாயிகள் சங்கம் உத்திரம், மாவட்ட துணை த்தலைவர் கணபதி, ஆழ்வை ஒன்றிய பொருளாளர் புலிராஜ், ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் செல்வ ராஜ், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், ஆழ்வை ஒன்றிய துணைத் தலைவர் ஆல்பர்ட் ஆசீர்வாதம், ஆழ்வை ஒன்றிய இணை செயலாளர் செந்தூர்பாண்டி, ஆழ்வை ஒன்றிய இணை செயலாளர் வீரமணி, ஆழ்வை ஒன்றிய துணைத் தலைவர் ஆறுமுக நயினார், மாவட்ட குழு உறுப்பினர் மணி மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News