உள்ளூர் செய்திகள்

மரக்காணம் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பூச்செடிகளில் சாமந்திப்பூ பூத்துக் குலுங்குவதை படத்தில் காணலாம்.

மரக்காணம் அருகே சாமந்திப்பூ பயிரிட விவசாயிகள் ஆர்வம்

Published On 2023-11-01 08:49 GMT   |   Update On 2023-11-01 08:49 GMT
  • தங்களுடைய நிலங்களில் சாமந்திப்பூ பயிரிட அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
  • சாமந்திப் பூவிற்கு நல்ல விலை கிடைக்குமென விவ சாயிகள் கருதுகின்றனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் அருகே ச.சிறுவாடி, ஓமிப்பேர், வடநற்குணம், நல்லம்பாக்கம், நகர் முன்னூர், ஆலங்குப்பம், அடைவள்ளிக்கூத்தான், வேப்பேரி, குருவூர், செட்டிகுளம், ராயநல்லூர், நாகப்பாக்கம், நாகல்பாக்கம், ஆலத்தூர் ஆகிய கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள் தங்களுடைய நிலங்களில் சாமந்திப்பூ பயிரிட அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

புதுவை மற்றும் திண்டி வனம் மார்க்கெட்டுகளில் சாமந்திப் பூக்கள் அதிகளவில் விற்பனையாகிறது. மேலும், விவசாயிகளுக்கு கட்டு படியான விலை கிடைத்தும் வருகிறது. தொடர்ந்து பண்டிகை நாட்கள் உள்ளதால் சாமந்திப் பூவிற்கு நல்ல விலை கிடைக்குமென விவ சாயிகள் கருதுகின்றனர். இதனால் மரக்காணம் சுற்றுப்புற பகுதியில் உள்ள விவசாயிகள் தற்போது சாமந்தி பூச்செடி பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது ஒரு கிலோ சாமந்திப்பூ ரூ.100-லிருந்து ரூ.120 வரை விற்பனையாகிறது.

Tags:    

Similar News