உள்ளூர் செய்திகள்

சேதமான சாலையை படத்தில் காணலாம்.

தொடர் மழைக்கு சாலை சேதம்: விவசாயிகள் பாதிப்பு

Published On 2022-10-26 12:43 IST   |   Update On 2022-10-26 18:00:00 IST
  • பல்வேறு இடங்களில் விவசாய நிலங்கள் மற்றும் காலியாக உள்ள தரிசு நிலங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.
  • மக்கள் மோட்டார் சைக்கிள் கூட ஓட்ட முடியாமல் அவதிபட்டு வருகின்றனர்.

ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டாரத்தில் தொடர்ந்து பெய்த கனமழைக்கு பல்வேறு இடங்களில் விவசாய நிலங்கள் மற்றும் காலியாக உள்ள தரிசு நிலங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.

இதேபோல், பாப்பாகவுண்டனூர் பகுதிக்கு செல்லும் மண் சாலை மழையால் மிகவும் சேதமடைந்து உள்ளது. நடந்துகூட செல்லமுடியாத அளவிற்கு புதை குழியாக மாறியுள்ளது. நடந்து சென்றால் கால்கள் மண்ணில் புதையும் அளவிற்கு சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் மோட்டார் சைக்கிள் கூட ஓட்ட முடியாமல் அவதிபட்டு வருகின்றனர்.

மேலும் இப்பகுதியில் பெரும்பாலானோர் விவசாய குடும்பத்தினர் எனபதால், கறவை மாடுகளும், கால்நடைகளும் வளர்த்து வருகின்றனர். பால் வியாபாரமும் செய்து வருகின்றனர். தற்போது இப்பகுதிக்கு வரும் சாலை சேதமடைந்து உள்ளதால் பால் வாகனம் வர முடியவில்முலை. கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல முடியவில்லை. எனவே ஓமலூர் ஒன்றிய அதிகாரிகள் இந்த பகுதியை ஆய்வு செய்து, மண்ணை கொட்டி சாலையை சரி செய்து கொடுக்க வேண்டும். மேலும், பேவர் பிளாக் சாலையோ அல்லது கான்கிரீட் சாலையோ அமைத்து கொடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News